
கோலாலம்பூர்: ஜூலை 29- மலேசியாவின் அனைத்து அரசியல் தலைவர்களும் மிதவாதம், பரஸ்பர மரியாதை மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக இனம் மற்றும் மத வேறுபாடுகளைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொறுப்புள்ள தலைமை என்பது அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மலேசியா பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் மதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒற்றுமையைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசியல் தலைவர்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய முன்னேற்றம் போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்; மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அரசியலை முன்னிறுத்தக் கூடாது என்றும் ஙா கோர் மிங் கேட்டுக் கொண்டார்.

