
ஈப்போ, 16:
இங்குள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஆலய வளாகத்தை 30 மாணவர்களும் 8 விரிவுரையாளர்களும் துப்புரவு செய்தனர் என்று போலிடெக்னிக் உங்கு ஒமாரின் விரிவுரையாளர் நித்தியா பெரியசாமி கூறினார்.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தன்னார்வாலர்களாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெரும்பாலான மாணவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தபோதும் அனைவரும் காலை மணி 8.00 முதல் இரவு மணி 8.00 வரை இந்த துப்புரவு மற்றும் தோரணம் பின்னி ஆலய முழுவதும் கட்டினார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய செயல் திட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் நல்ல பண்புநெறி மற்றும் பிறருக்கு உதவுதல் மற்றும் ஆலய பூசைகள் நடவடிக்கைகளை நேரில் காண முடிந்தது. இத்தகைய நடவடிக்கைகளை திருவிழா காலங்களில் ஆங்காங்கே உள்ள உயர்கல்வி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்திற்கு உதவ முன்வரலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இங்குள்ள ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவினர் துப்புரவு பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் மற்றும் போக்குவரத்துக்கு உதவும் பொருட்டு பேருந்து வழங்கி உதவியதற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
உயர்கல்விகூட மாணவர்கள் இத்தகைய மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவது மிகவும் அவசியமாகும் என்று மாணவர்கள் தலைவர் குமுதன் கூறினார். இத்தகைய நடவடிக்கைகளில் ஈனுபடுவதின் வழி சிறந்த பண்புநலன் கொண்ட மாணவர்கள் உருவாக வழிவகுக்குகிறது என்று அவர் உறுதியுடன் கூறினார்.

