விண்ணை அதிரும் வகையில் தமிழ் அர்ச்சனை முழக்கங்களுடன் பெட்டாலிங் தாமான் செந்தோசா அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

பெட்டாலிங் ஜெயா, பிப்.17-
பெட்டாலிங் உத்தாமா தாமான் ஸ்ரீ செந்தோசா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா தமிழில் நடைபெறும் என ஆலயத் தலைவர் வீரபத்தன் தெரிவித்தார்.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புக்குரிய வரலாற்றுப்பூர்வமான இந்த ஆலயம் முன்னாள் பெட்டாலிங் டின் மைனிங் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு தற்போது திருக்கயிலாய மரபு மெய்கண்டார் சன்னிதானம் திருப்போரூர் ஆதீனம் 25 ஆப் பட்டம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில்
எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 முதல் 10.00 க்குள் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது.

இதுவரையில் நாம் அதிகம் காணாத வகையில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில், திருமுறைகள் பாடல்கள் பாடப்பட்டு மிக வித்தியாசமாக இவ்விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு இவ்விழா ஒரு புதிய அனுபவமாக அமையும்.

இந்த திருக்குட இன்ன விழா தமிழில் நடைபெறுவதால் அதன் சக்தியை வேறுபட்ட வகையில் பக்தர்கள் உணர முடியும் என ஆலய தலைவர் கூறினார்.

மேலும் நடைபெறவிருக்கும் இந்த திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு இம்மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 23 ஆம் திகதி வரையில் ஆலயத்தில் 18,280 திருமுறைப் பாடல்கள் பாடப்படுகிறது.

திருமுறை ஆசிரியர்கள், ஓதுவார்கள், சிவபூசகர்கள், சிவநெறியாளர்கள், சைவ சமய இயக்கங்களின் பொறுப்பாளர்கள், மாணவர்கள், என பலரும் இதில் கலந்து சிறப்பு செய்யவுள்ளனர்.

ஆகவே இவ்வேளையில் இந்த புனித திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்துக்கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மனின் ஆசி பெற்று பயன்பெற பொது மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இந்த ஆலயம் சுமார் 30 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆலயத்தின் திருப்பணி வேளைகள் இன்னும் சிலவற்றை முழுமை அடையாமல் உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

இவ்வேளையில் அலய திருப்பணிக்கு நன்கொடை வழங்க விரும்பும் மக்கள்; AM BANK 0830020006656 KUIL SRI MAHA MARIAMMAN எனும் வங்கிக் கணக்கில் தங்களின் நன்கொடைகளை செலுத்தலாம். அல்லது மேல் விவரங்களுக்கு 012-9143342/ 012-3886185 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு விவரம் பெறலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles