
வாஷிங்டன்: பிப் 27 -கடந்த மாதம் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் அரசாங்கத் திறன் துறை பதவியிலிருந்து விலகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, 2026இல் ஓஹியோ மாநில கவர்னர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை துவங்கினார்.
முன்னாள் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசாமி ஓஹியோ கவர்னர் பதவிக்கான போட்டியில் நுழைந்துள்ளார். ராமசாமியின் தேர்தல் பிரசாரத்தை ஜே.டி.வான்ஸ் வழிநடத்துகிறார்.
சின்சனாட்டியில் நடந்த பேரணியில், விவேக் ராமசாமி பேசியதாவது:
மனிதகுலம் அறிந்த மிகப்பெரிய தேசத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறந்த மாநிலத்தின் அடுத்த கவர்னராக போட்டியிடுகிறேன்.
நான் பிறந்து வளர்ந்த மாநிலம். இங்கு தான் எங்கள் இரண்டு மகள்களும் வசிக்கின்றனர்.
ஒரு தொழிலை துவங்கி வளர்க்க நாட்டிலேயே சிறந்த மாநிலமாக ஓஹியோவை நான் வழிநடத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.

