
சென்னை: ‘
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ., அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும்.
பாசிசம் பயங்கரமானது; படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது; உடல் நலத்திற்கு நல்லது.இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.,வின் முதல் மாநாட்டில், ‘அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா’ என்று கூறி தி.மு.க.,வை விஜய் தாக்கி பேசியிருந்தார்.
இன்றைய பேச்சிலும், ‘பாயாசம்’ என்று குறிப்பிட்டு கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் செயலாளர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

