
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்தாங் காலி, பிப் 26
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பத்தாங் காலியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேகத்தை காண வட்டார மக்கள் பெரும் அளவில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் சிறப்பு வருகை தந்து ஆலயத்திற்கு பத்தாயிரம் வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
நான் வழங்கும் இந்த மானியம் ஆலய நிர்வாகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக சொன்னார்.
கடந்த ஆண்டு கோல குபு பாரு இடைத்தேர்தலின் வெற்றிக்கு பிறகு இந்த சட்டமன்றத்தின் மக்களுக்கு சிறப்புடன் சேவையை வழஙகி வருகிறார். அந்த வகையில் இவ்வாலயத்திற்கு அவர் வழஙகியிருக்கும் மாணியம் மகிழ்ச்சியளித்திருப்பதாக உலு சிலாங்கூர் Zon 11 பத்தாங்காலி கவுன்சிலர் ராஜேஸ் ராவ் தெரிவித்ததோடு தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

பத்தாங் காலி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற நிதியுதவி வழங்கிய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும் தொழில்முனைவர்களும் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் கவுன்சிலர் ராஜேஷ் ராவ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்று இந்த ஆலயம் மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பார்ப்பதற்கு தமக்கு பெறும் மகிழ்ச்சியளிப்பதாக கூறிய ராஜேஸ் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடத்திமுடித்த ஆலய நிர்வாகத்திற்கும் பாராட்டக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றியை புலப்படுத்தி கொண்டார்.

