
கலும்பாங், பிப் 26
உலுசிலாங்கூரில் பிரசித்திபெற்ற கலும்பாங் ஸ்ரீ மஹா சிவசக்தி மாரியம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி புஜை சிறப்பாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி பூஜை மாஹா சிவராத்திரியாக வழிபாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில் உலுசிலாங்கூர் கலும்பாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா சிவசக்தி மாரியம்மன் ஆலயத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ மகா யோகநாதர் சிவபெருமனுக்கு பிரத்தியேகமாக பூஜைகள் நடைபெறுகிறது.
மஹா சிவாராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மகா யோகநாதருக்கு சிறப்பு யாகங்களும் அபிஷேகங்களும் ஆலயத்தின் தலைமை குருக்கள் ஈஸ்வரன் குருக்கள் சிறப்புடன் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹா சிவராத்திரி பூஜையில் உலுசிலாங்கூரை சேர்ந்த மக்கள் ஏராளமானோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

