
போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மரண தண்டனை வகை செய்யும் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இரு ஆடவர்கள் அக்குற்றச்சாட்டிலிருந்து ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இந்த வழக்கில் 39 வயதுடைய விஜேந்திரன் ராமச்சந்திரன், 31 வயதுடைய சசிதரன் தயாளன் ஆகிய இருவரும் .கடந்த 6-9-2020:இல் இரவு 9 மணியளவில் ஈப்போவில் உள்ள சன்வே சிட்டி அருகே கார் நிறுத்தும் இடத்தில் 1.5 கிராம் heroin மற்றும். 4.5 கிராம் எடைக்கொண்ட monoacetylmorphines ரக போதைப் பொருள் வைத்திருந்த்தாக முதல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக போதைப் பொருள் அபாயகர சட்டப் பிரிவு 39எ ( 2:) பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு எதிராக மேல் குறிப்பிட்ட அதே இடத்தில் 73.7 கிராம் methamthemamine ரக பொருளை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக 39பி( 2) எதிராக குற்றப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆடவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கில் அவ் விருவரும் குற்றவாளிகள் என பிரசகியூஷன் தரப்பில் போதிய ஆதாரத்தை நிருபிக்கத் தவறியதால் அந்த இரு ஆடவர்கள் அக்குற்றச் சாட்டிலிருந்து நீதிபதி மோசஸ் சூசையன் இன்று ஈப்போ உயர் நீதிமன்றம் விடுதலை செய்வதாக தீரப்பளித்தார.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சார்பில் வழக்கறிஞர் சரண்சிங் , நத்தாஷா பிரிவினா, டத்தோ சீலன் அர்ஜூணன், பரிடா அர ஷாட் மற்றும் அரசு தரப்பில் டி. பி் . பி. கீத்தா ஜோரா சிங் ஆகியோர் ஆஜராயினர்.

