
அதிக விலை கொண்ட மூலப்பொருட்கள் காரணத்தால், இந்த வாரம் பள்ளி தொடங்கியதில் இருந்து பள்ளியில் உள்ள கேன்டீன்களில் உணவு விலைகள் 50% வரை அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது.
முட்டை, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற மூலப்பொருட்களின் போதிய விநியோகம் கேன்டீன்களின் செயல்பாடுகளை பாதித்துள்ளதாக மலேசிய பள்ளி கேன்டீன் நடத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 1 வெள்ளியுடன் ஒப்பிடும்போது ரொட்டி சனாய்1 வெள்ளி 50 காசுக்கு விற்கப்படுகிறது.
பொறித்த கோழியின் விலை 1 வெள்ளி 50 காசு மற்றும் நாசி லெமாக் 2 வெள்ளி 50 காசாக அதிகரித்துள்ளது.

