அமைச்சர் சிவகுமார் உட்பட ஜசெக இந்தியத் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் மர்மம் என்ன!
பின்னால் ஒளிந்திருக்கும்
குள்ள நரிகள் யார்?

பிரதமர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் மிகவும் திறம்பட பணியாற்றி வருகிறார்.

இந்திய தொழில் துறைகள் குறிப்பாக முடித்திருத்தும் நிலையங்கள், உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகள், நகைக் கடைகள், ஜவுளிகள், உணவகங்கள் காலங்காலமாக எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி வருகிறார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் உத்தரவுக்கு இணங்க மூன்று மாதங்களில் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித வள அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்தியர்களின் பிரதிநதித்துவம் மற்றும் தொழில் பயிற்சிகளில் அதிகளவில் இந்தியர்களை சேர்க்கும் படலத்தில் அமைச்சர் சிவகுமார் களம் இறங்கி உள்ளார்.

இது தவிர்த்து இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியர் சிறப்பு குழு ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சராக பதவி ஏற்று ஒரே மாதத்தில் இவர் இத்தனை பணிகளைச் செய்து வருகிறார்.

ஆனால் இவரையும் ஜசெக இந்தியத் தலைவர்களையும் மட்டம் தட்டும் வகையில் ஒரு இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் துணை தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் ஆகியோர் சிறந்த முறையில் இந்தியர்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள்.

ஜசெக கட்சியை சேர்ந்த தலைவர்கள் முழக்கம் போடத்தான் தெரியும். சேவை ஆற்றுவதில்லை என்று அப்பட்டமாக அந்த இணையத் தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜசெக இந்தியத் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதன் மர்மம் என்ன?

இந்த செய்திக்கு பின்னால் ஒளிந்திருக்கும் குள்ளநரி யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

ஜசெக இந்தியத் தலைவர்கள் பல போராட்டங்களை சோதனைகளை சந்தித்தவர்கள்.

பல போராட்டங்களுக்காக சிறை சென்றுள்ளனர். ஆகவே இந்த மாதிரியான குள்ளநரி களுக்கு ஜசெக இந்தியத் தலைவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் என்று ஜசெக தலைவர்கள் சூளுரைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles