
இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியர் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.
இந்திய தொழில் துறைகள் எதிர்நோக்கி இருக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் இந்தியர்கள் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காண வகையில் இந்த சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த குழுவில் இந்தியர் நாடாளுமன்ற, சட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
இதன் மூலம் இந்தியர்களின் வியாபாரங்கள், தொழில்கள் மேம்படுத்தப்படும் என்றார்.
கூட்டுறவு தொழில முனைவர் மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது மனித வள அமைச்சர் வி சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.

