
ஒரு காலத்தில் ஈடுசெய்ய முடியாத மாபெரும் கட்சியாக அம்னோ விளங்கியது.
இப்போது பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைக்க முன் வந்திருக்கும் அம்னோவால் மலாய்க்காரர்களின் போதுமான ஆதரவை திரட்டி வர முடியுமா என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேள்வியை முன் வைத்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அம்னோ வீழ்ச்சி கண்டிருக்கிறது.
அந்த வகையில் அம்னோவால் மலாய் வாக்காளர்களை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான், திரெங்கானு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுடன் தேசிய முன்னணி ஒத்துழைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

