
இந்நாட்டில் குடியுரிமை இல்லாமல் நாடாற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு தீர்வு காண பாடுபடுவேன் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.
இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து குடியுரிமை இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் கண்ணீருக்கு தீர்வு காணப்படும்.
காலம் தாமதமாக பிறப்பு பத்திரம் எடுத்தல், பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் போன்ற விவாகரங்களுக்கும் தீர்வு காணப்படும்.
இது தவிர்த்து கோவில்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியர் சிறப்பு நடவடிக்கை குழு மூலம் அனைத்து இந்தியர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உதவியோடு இந்தியர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

