சென்னையில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் மலேசியப் பேராளர்கள் பங்கேறுபு

சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மாநாட்டு மண்டபத்தில் இன்று உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு விமரிசையாக
நடைபெற்றது.

தமிழ்க் அமைச்சரவையில் அயல் நாடு தமிழர்கள் விவகார அமைச்சர் மஸ்தான் இந்த மாநாட்டை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் கேசவன், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர் டத்தோ ரவி, சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கிள்ளான் சேகர் உட்பட நூறுக்கும் மேற்பட்ட மலேசியா பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை, மலேசியா, இந்தியா, மொரிசியஸ், சிங்கப்பூர் உட்பட பல அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த வம்சாவளி மாநாட்டில் கலந்து பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles