



கோலாலம்பூர் ஜூன் 13-
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கு புதிய அலுவலகத்தை ஏற்படுத்தி தருவோம் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் வி.கே.கே.இராஜசேகரன் – துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
நாளை தோட்ட மாளிகையில் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது.
இம்முறை வி.கே.கே. இராஜசேகரன் மற்றும் பிரபாகரன் வைத்தியலிங்கம் அணிகள் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறது.
வி.கே.கே.இராஜசேகரன் அணியில் துணை தலைவர் பதவிக்கு பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மோகனா சின்னத்தம்பி களம் இறங்கி உள்ளார்.
நாளை நடைபெறும் தேர்தலில் வி.கே.கே. இராஜசேகரன் அணி வெற்றி பெற்றால் சங்கத்திற்கு புதிய அலுவலகம் ஏற்படுத்தி தரப்படும்.
தற்போது ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள அலுவலகம் பழமையானது.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி தரும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய அலுவலகம் ஏற்படுத்தி தருவோம் என்று இராஜசேகரன் மற்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தனர்.
நேற்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் இராஜசேகரன் அணி வேட்பாளர்கள் அறிமுகம் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதனிடையே உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணியில் டாக்டர் சித்ரா தேவியும் பிரபாகரன் அணியில் கவி மாறனும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணியில் ஐ.ஆர். டாக்டர் பிரபாகரன் மற்றும் பிரபாகரன் அணியில் சண்முக செல்வியும் போட்டியிடுகின்றனர்.
கவுன்சிலர் பதவிக்கு இராஜசேகரன் அணியில்
டாக்டர் செல்வராஜூ,
டாக்டர் இராஜசேகரன்,
டத்தோ கணேஷ்,
பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம்,
குட்டி கிருஷ்ணன் மாதவன்,
டோனி கிளிபெர்ட்,
ஷாமில்,
டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

