
சுகாதார அமைச்சில் காலியாக உள்ள 4,914 நிரந்தர வேலைகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
அதில் 4, 263 இடங்கள் மருத்துவ அதிகாரிகள் ஆவார்.
எஞ்சிய 335 இடங்கள் பல் மருத்துவர்கள், , 316 இடங்கள் மருந்தக அதிகாரிகளுக்கு உட்பட்டவை என்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா இன்று தெரிவித்தார்.
இன்று தொடங்கி இம்மாதம் 21-ஆம் தேதி வரையில் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

