மீரா கட்சியின் புதியத் தலைவராக டத்தோ சந்திரகுமணன் தேர்வு! டத்தோஸ்ரீ தெய்வீகன் உதவித் தலைவரானார்

மீரா எனப்படும் சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சியின் 2021-2021 ஆம் ஆண்டுக்கான மாநாடு இன்று காஜாங் ஓரியண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

ஆர் ஓஎஸ் உத்தரவுக்கு இணங்க இடைக்கால தலைவர் சந்திரசேகரன் மற்றும் கட்சி தலைமை செயலாளர் கண்ணன் இராமசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 300 பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பின்னர்
2023-2025 ஆம் ஆண்டுக்கான 22 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 24 பேர் போட்டியிட்டனர்.

பிபிசி கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ ஆர். சந்திரகுமணன், கண்ணன் இராமசாமி, டாக்டர் கே.எஸ். பாஸ்கரன், யு.எஸ். சுப்ரா, லெம்பா பந்தாய் மூர்த்தி, கார்த்திகேசு, தீபன், கோத்தா ராஜா லெட்சுமணன், எண்டி செங்கையா, கங்காதேவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பின்னர் 22 உச்சமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரை தேர்வு செய்தனர்.

தலைவராக டத்தோ ஆர் சந்திரகுமணன், துணை தலைவராக டத்தோ கிருஷ்ணன், 3 உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ தெய்வீகன், லெட்சுமணன், காரீத்திகேசு, செயலாளராக கண்ணன் இராமசாமி, துணை செயலாளராக குமாரு, பொருளாளராக யு.எஸ். சுப்ரா, இளைஞர் பிரிவு தலைவராக தீபன், மகளிர் அணி தலைவியாக ரினா ரேவதி, தகவல் பிரிவுத் தலைவராக முரளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles