கிந்தா இந்தியர் சங்கமும் செட்டியார் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் மணக்கும் தமிழ் இலக்கியம்” சொற்பொழிவு!

ஈப்போ, ஜுன்.12: ஈப்போ கிந்தா இந்தியர் சங்கமும், இங்குள்ள செட்டியார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒன்றிணைந்து” மணக்கும் தமிழ் இலக்கியம்” நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்வி அடிப்படையிலான இந்நிகழ்வு எதிர்வரும் 16.6.2025( திங்கட்கிழமை), மாலை மணி 6.00 க்கு புந்தோங் ஜாலான் குட்வாராவில் அமைந்துள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கிந்தா இந்தியர் சங்கத்தின் உதவித்தலைவரும் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவருமான முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழகப் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கலை அமுதன் சொற்பொழிவாற்றவுள்ளார். தமிழ் இலக்கியம் குறித்தும் மாணவர்களுக்கு தன்முனைப்பு குறித்தும் பேசவள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. ஆகையால், பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றனர். தொடர்புக்கு: முனைவர் சேகர் நாராயணன்( 012-4662879), டேவ் ஆனந்த்( 012-5749390)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles