வடகிந்தா தமிழ்பள்ளி் கள் இடையிலானகால்பந்து போட்டி !

கிந்தா, அக் 10-
வடகிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான காற்பந்து போட்டியினை மிகச் சீரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் பெயரில். நடதப்பட்ட இப்போட்டியில் வட கிந்தாவில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன.

வெற்றிகரமாக நடைபெற்ற நிகழ்வை PERSATUAN KEBAJIKAN SEHATI WARGA PERAK அமைப்பு ஏற்பாட்டை செய்தது்
.
வடகிந்தா மாவட்ட்த் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழத்தின் ஒத்துழைபுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகது்

இந்த நிகழ்வை தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் மூத்த சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஸ்குமார் தொடக்கி வைத்தார்

விளையாட்டுத் துறையில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த மீண்டும் இவ்வாண்டு இப்போட்டியை நடத்துவதாக அதன் ஊற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். ஸ்டென்லி நெல்சன் கூறினார்

இபோட்டியில். ஆண்கள் பிரிவில் செட்டியார் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், கிளேபாங் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும் , அரசினர் தமிழ்ப்பள்ளி (மூன்றாவது இடத்தையும் தேச பிஞ்சி தமிழ்ப்பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தது.

பெண்கள் பிரிவில், அரசினர் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், செட்டியார் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும் மற்றும் நான்காவது இடத்தை கிளேபாங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய வடகிந்தா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு அயராது பயிற்சி அளித்த (உழைக்கும்) ஆசிரியர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும்,எப்போதும் பக்கபலமாக பேராதரவாக இருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாளர் வாரியத்தினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் தனிநபர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

வெற்றிப் பெற்றவர்களுக்கு தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரின் மூத்த சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ் குமார், வணிகப் பிரமுகர் டத்தோஸ்ரீ எஸ். கேசவன் மற்றும் பேரா தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles