
கோலாலம்பூர் –
மஸ்ஜித் இந்தியாவில் மடானி ஒற்றுமை தீபாவளி கொண்டாட்டம் 11ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் அசோகன் இதனை கூறினார்.
கோலாலம்பூர் வர்த்தகர்கள், சிறு வணிகர்கள் ஒற்றுமை சங்கம், மஸ்ஜித் இந்தியா வணிகர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், கூட்டரசுப் பிரதேச இலாகாவின் ஆதரவில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சி 11ஆவது ஆண்டாக நாளை அக்டோபர் 12ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஸ்ஜித் இந்தியா செமுவா ஹவுஸில் நடைபெறவுள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்விழாவிற்கு தலைமையேற்கவுள்ளார்.
பல நிகழ்ச்சிகளுடன் உதவிகளும் வழங்கப்படவுள்ளது.
ஆகவே சுற்று வட்டார மக்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.