தீபத்திருநாளில் 75 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது

இருள் மறைந்து ஒளி பிறக்கும் தீபாவளி திருநாளில் 75 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டதாக மகிழ்ச்சியான தகவலை மாநில இந்தியர் நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

சுமார் 60ஆண்டுக்காலம் நிலப்பட்டா இன்றி அரசு நிலங்களில் வசித்து வந்தவர்களுக்கு அவர்களின் இத்தனை ஆண்டுக்கால நிலப்பட்டா பிரச்னைகளுக்கு மூன்றாண்டில் தீர்வு பிறந்திருப்பதாகவும் மாநில சுகாதாரம்,மனிதவளம் மற்றும் ஒருமைப்பாடு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இரவு பீடோரில் நடைபெற்ற அ. தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது தாப்பா,பீடோர் மற்றும் சுங்கை ஆகிய வட்டாரங்களில் சுமார் 58 குடுபங்களுக்கு நிலப்பட்டக்கள் வழங்கப்பட்டது .இதில் தாப்பா வட்டாரத்தை சார்ந்தவர்களும் அடங்குவர் என்றார்.

பேரா, பீடோரில் உள்ள முகிபா மண்டபத்தில் திறந்து இல்ல உபசரிப்பை நடத்தியப் பின்னர் சிவநேசன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஊத்தான் மெலிந்தாங் சன்மார்க்கம் கட்டடத்தில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வசந்தி நடத்திய தீபாவளி அன்பளிப்பு மற்றும் திறந்த இல்ல உபசரிப்பின் போது கம்போங் சுங்கை தீமா வாழ் மக்கள் 45 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டதாக கூறினார்.

இவர்கள் அனைவரும் முன்பு தோட்டங்களில் வசித்தவர்கள்.பணி ஓய்விற்கு பின்னர் அரசு நிலங்களில் வீடு கட்டி குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரா மாநிலத்தில் சுமார் 50ஆண்டுகள் கடந்து நீடித்து வந்த நிலப்பட்டா பிரச்னைகளுக்கு இந்த மூன்றாண்டில் நிறைவாகத் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் இவ்வாண்டு தீபாவளி இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திருநாளாக உயிர்பெற்றிருப்பதாகவும் சிவநேசன் குறிப்பிட்டார்.

மேலும்,பீடோரில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பின் போது “Jualan Rahmah” விற்பனைச் சந்தையோடு ஆடல் பாடல்,சுவைமிகு உணவுகளும் பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வில் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சரும், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பிருமான Chang lih உkang , மாநில சமுக ஒற்றுமை துறை இலாகாவின் பேரா மாநில இயக்குனர் mansor Hashim ஆகியோரும் வருகை புரிந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles