வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார் மாண்புமிகு சிவகுமார்!!

ஷா ஆலம்,அக்13: பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் வணிக நிர்வாகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அவர் ஆசியா இ பல்கலைக்கழகத்தில் (AeU) தன் கல்வி பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக முனைவர் கல்வியையும் நிறைவு செய்து முனைவர் சிவகுமாராவும் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் தினம் ஷா ஆலம் ஐடிசிசி மாநாடு அரங்கில் நடைபெற்ற அப்பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்திற்கான சான்றிதழைப் பெற்றார்.

தனது தொடர் முயற்சியாலும் கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தாலும் தாம் முனைவர் கல்வியை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய முனைவர் மாண்புமிகு சிவகுமார் தனது இக்கல்வியின் வாயிலாக மலேசியர்களுக்கும் இந்தியச் சமுதாயத்திற்கும் எண்ணற்ற செயல்களை ஆற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,பொருளாதாரத்தை வழிநடத்துதல்,மலேசியத் Gig தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு,வேலை பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த கருத்துகளின் பகுப்பாய்வு என்ற அவரது ஆய்வறிக்கை மலேசியாவிலுள்ள Gig பொருளாதாரத் துறை தொழிலாளர்களிடையே உள்ள கருத்துக்கள்,சவால்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தேவைகளை ஆழமாக ஆராய்கிறது.

அதுமட்டுமின்றி,இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தின் சூழலில்,குறிப்பாக ஃப்ரீலான்ஸ் தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க மிகவும் உள்ளடக்கிய மற்றும் நிலையான கொள்கைகளை வகுப்பதில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இக்கல்வியின் வாயிலாக கற்றுணர்ந்தவற்றை சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி நாட்டின் உயர்விற்கும் தொடர்ந்து பங்காற்றவிருபதாக கூறும் டாக்டர் சிவகுமார் கல்விக்கு எதுவும் தடையில்லை.காரணம் சொல்லி காலம் தாழ்த்துவதை தவிர்த்து எல்லா தரப்பினரும் கல்வியின் மீது நாட்டம் கொள்ள தாம் ஒரு முன்மாதிரியாக திகழ்வதாகவும் அவர் பெருமிதமாக கூறினார்.

குறிப்பாக, இளம் தலைமுறையினர் கல்வியை ஒரு வரையறைக்குள் வைக்காமல் தொடர்ந்து அதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.வேலைக்காக மட்டும் கல்வியை ஒரு கருவியாக கொள்ளாமல் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் கல்வியை ஓர் ஆயுதமாகக் கொண்டு அதில் நாட்டம் கொள்ள வேண்டும் என பேரா மாநில முன்னாள் சபாநாயகருமான மாண்புமிகு டாக்டர் சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles