

கோலாலம்பூர் அக் 13-
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், சீனம் மற்றும் தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia ஆதரவோடு Basic 8, Lorong 19/1a, Seksyen 19, Petaling Jaya 46300 Selangor என்ற இடத்தில் இரு சனிக்கிழமை தோறும் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு நன்மை அடைந்துள்ளனர்.

Arutsothy Annamalai இந்த பயிற்சி பட்டறையை சிறப்பாக வழி நடத்திய வேளையில் Blues Brothers Welfare Association Malaysia இளைஞர் அணி தலைவர் YBhg. Datuk Dr. M. Shankar முன்னின்று இதை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் அரசு சாரா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு (SJK, SJK(T), SJK(C) & SMK) ஒரு AI திட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த வாய்ப்பை ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.
Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட முதல் பயிற்சி பட்டறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது என்றார் அவர்.
Dato Micheal, Founder of Blue Brothers Welfare and Association Malaysia , Dato Jayabalan, CEO of Institute Kerjaya Proaktif National (IKPN), -Dr. Annathurai, CEO of EPI Training ,
Mr. Ravi, Operations Director of Strands Engineering, – Mr. Abdul Samad, President of Blue Brothers Welfare & Association Malaysia, -Mr. Arutsothy, Generative AI Practitioner (the master who did this training) ஆகியோரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா Amazing Creation Banquet Hall
No 1-1, Jalan Dravidan, Bandar Baru Ampang, 68000 Ampang இல் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் Blues Brothers Welfare Association Malaysia வுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.