
கோலாலம்பூர் அக் 13-
இருபது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது வரவேற்கக் கூடியது என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய பள்ளியியாக ஜெராம் தோட்ட தமிழ்ப் பள்ளி கட்டப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த பள்ளி கொள்கலனில் இயங்கி வந்தது.
இது தொடர்பாக பகாங் மாநில உரிமை கட்சி தங்களால் இயன்ற வழிகளில் அழுத்தம் கொடுத்தது. இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது வரவேற்கக் கூடியது.
இன்னும் நாட்டில் பல தமிழ்ப் பள்ளிகள் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இந்த பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசு முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.