
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 13-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
நாடு முழுவதும் இப்பொருட்கள் வழங்கப்பட்டது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா அரசாங்கத்தில் இல்லை என்றாலும் மக்களுக்கான உதவிகளை மஇகா நிறுத்தியது இல்லை.
இதன் அடிப்படையில் தான் வசதிக் குறைந்த மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கி வருகிறோம் என்றார் அவர்.
கிட்டத்தட்ட 25,000 முதல் 27,000 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதுவொரு சின்ன உதவியாக இருந்தாலும் தீபாவளி விழாவின் போது வசதிக் குறைந்த மக்களுக்கு இது அர்த்தமுள்ள உதவியாகும்.
அவ்வகையில் இன்று மஇகா மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கும் தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கெமேலே சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையிலான மஇகா மகளிர் பிரிவின் இம்முயற்சி பாராட்டுக்குரியது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.