
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 13-
ம இகா தலைவர்களை சந்தித்து பேசியதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தேசிய முன்னணி கூட்டணியில் கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க கடந்த வாரத்தில் பலமுறை மஇகா தலைவர்களைச் சந்தித்ததாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
மஇகா தலைவர் என்ற முறையில் நான் அம்னோ தலைவரான ஜாஹிட்டை கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன்.
மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு தேசிய ஒற்றுமைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, நான் அவரைச் சந்தித்தேன்.
மஇகா கூட்டணியை விட்டு வெளியேறி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் சேர திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, தேசிய முன்னணிக்குள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஜாஹிட்டை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை.
இருப்பினும் மசீச குறித்து என்னால் எதுவும் பேச முடியாது.
ஆனால் கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்த மஇகா, ஜாஹிட் இடையேயான சந்திப்பு எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.