
பட்டர்வொர்த், அக் 13-
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக பினாங்கில் நடைபெற்றது.
பினாங்கு மாநில மக்கள் கட்சியின் தீபாவளி கொண்ட்டாட்டம் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் கம்போங் பெங்காலியில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தைக் கொண்டாட ஒன்றுகூடியதைக் கண்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பாதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

மேலும் பினாங்கு ராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டதோடு அவர்களும் தீபாவளியின் பண்டிகை சூழ்நிலையை கண்டுகளித்தனர்.
தேவைப்படும் சமூகத்தின் மீதான அக்கறையின் அடையாளமாக, 250க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பெலித்தா சமுட்ரா பெர்த்தாமா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ ரமேஷ், பினாங்கு மஇகா தலைவர் டத்தோ தினகரன், பாய் ஷி யின் கலாச்சார, கலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மதர் பாய் ஷி யின், ஸ்ரீ சுபம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முருகேசு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை சிறப்பாக ஏற்ப்பாடு செய்ய முழு அர்ப்பணிப்புடனும், ஒற்றுமை உணர்வுடன் கடுமையாக உழைத்த முழு பினாங்கு மக்கள் சக்தி கட்சி குழுவிற்கும் தனது பாராட்டுகளைத் அவர் தெரிவித்துக் கொண்டார்.
தீபாவளி கொண்டாட்டத்தின் உண்மையான உணர்விற்கு ஏற்ப, இந்த கொண்டாட்டம் அன்பு, ஒற்றுமை, சமூகத்தின் மீதான அக்கறையின் அடையாளமாக விழங்குகிறது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.