

கோலாலம்பூர் அக் 12-
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிரதமருடன் தீபாவளி கலை விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் வேலாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா, ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், மலேசிய இந்தியர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன், விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா , கேவிடி தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை, மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் வசதி குறைந்தவர்கள் மற்றும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. குறிப்பாக விலாயா மாநிலத்தில் உள்ள 25 தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் புத்தாடைகளை வாங்கி கொள்ள இந்த பணம் பெரும் உதவியாக இருக்கும்.
வர்த்தக பிரமுகர் ஜீவா அவர்கள் 25 மாணவர்களுக்கான தீபாவளி அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு பேருதவியை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.