
கிள்ளான், அக் 12-
கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் நேற்று கிள்ளான் லிட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.
நேற்று மாலை கிள்ளான் ‘லிட்டில் இந்தியாவில் தீபாவளி நடைப்பயணத்தில் சமூக தலைவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்டிகை ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.
கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜ் மற்றும் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கையன் ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
அவர்களை லிட்டில் இந்தியா கிள்ளான் வர்த்தக சங்கத் தலைவர் சார்லஸ் மாணிகம் அன்புடன் வரவேற்றார்.
இந்த நடைப்பயணம் எட்டு முக்கியமான மொத்த விற்பனை கடைகள் வழியாக நடைபெற்றது.
நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 தீபாவளி பரிசுக் கூடைகள் (ஹாம்பர்கள்) உள்ளூர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
ஒற்றுமையும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு செய்தியுடன், வரவிருக்கும் தீபாவளிக்கான ஒளியின் திருவிழாவை முன்னிட்டு மகிழ்ச்சி பரப்பப்பட்டதாக
சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்தார்.