
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், அக் 13-
பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியை காண வேண்டும் என்பதே டிஎஸ்கே சமூக நல அமைப்பின் முதன்மை இலக்காகும் என்று
அவ்வமைப்பின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் சிரமப்படும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம்.

கடந்தாண்டு பல ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு உணவு, தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினோம்.
இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பி 40ஐ சேர்ந்த 500 பிள்ளைகள் பத்துமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பத்துமலையை சுற்றி பார்த்தனர். அவர்களுக்கான பல கேளிக்கை விளையாட்டுகளும் நடத்தப்பட்டது.

அதே வேளையில் அவர்களுடன் இணைந்து விருந்து சாப்பிட்டோம்.
குறிப்பாக அவர்கள் அனைவருக்கும் தீபாபளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
டிஎஸ்கே சமமேற்கொள்ளப்படும்.
முதல் புதிய முயற்சி இதுவாகும்.
தீபாவளி பெருவிழா காலங்களில் ஆதரவற்ற, வசதிக் குறைந்த பிள்ளைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டும். இதுவே எங்களின் இலக்கு.
வரும் காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

டிஎஸ்கே சமூக நல அமைப்பின் அனைத்து முயற்சிகளுக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் அதன் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் முழு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இவ்வேளையில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.