பாங்கி ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்

பாங்கி, அக் 21-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாங்கி ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்கு இவ்வாண்டு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

பாங்கி தொகுதி கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மதிவேந்தர் முயற்சியில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் கிடைக்கப் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாங்கி ரூக்குன் தெத்தாங்கா தலைவர் மகேந்திரன் தலைமையில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டும் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு கூடைகள் பெற்றுக் கொண்ட மக்கள் மகேந்திரன், மதிவேந்தர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முனியாண்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles