மலேசிய இளைஞர்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தங்கு விடுதி மற்றும் சுற்றுலாத்துறையில் தொழில்முறை பயிற்சி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கோலாலம்பூர், அக் 31

UK-DHS சிங்கப்பூர் இணைப்பு பயிற்சி திட்டம் மூலம் ஆண்டு தோறும் 100 இளைஞர்கள் ஆறு மாதங்களுக்கு பங்கேற்பர். பாதி நிதியுதவி கொண்ட இத்திட்டத்தில் மாதம் SGD 650 முதல் SGD 1,100 வரை கொடுப்பணவு, வாசிப்பிடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படுகின்றன.

முழு நிதியுதவியுடன் நடைபெறும் UK-DHS இன்டர்ன்ஷிப் வேலைநிலை திட்டம் மூலம் ஆண்டு தோறும் 25 இளைஞர்கள் 15 மாதங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத்துறையில் டிப்ளோமா படிப்பைப் பெறுவர்.

மலேசியாவில் நடைபெறும் ஹோட்டல் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் வழி 97 இளைஞர்கள் 12 மாத பயிற்சியைப் பெறுவர். மாதம் RM 700 கொடுப்பணவு, வாசிப்பிடம், உணவு மற்றும் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு உலகளாவிய வேலை அனுபவத்தை வழங்கி, உள்ளூர் திறமையை மேம்படுத்தி, வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சார்பை குறைக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக DHS Hospitality Academy தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles