கேள்விகளுக்கு அரசியல் தலைவர்கள் முதிர்ச்சியுடன் பதில் சொல்ல வேண்டும் – டத்தோ கண்ணா சிவகுமார் வேண்டுகோள்!

கோலாலம்பூர் நவ 1-
பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் முதிர்ச்சியுடன் பதில் சொல்ல வேண்டும் என்று
டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ கண்ணா சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

உத்துசான் மலேசியா பத்திரிகையாளருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ஒருவரின் செயலை நான் பார்த்த நான் வியந்து போனேன்.

தேசிய மொழியான மலாய் மொழியைப் பயன்படுத்தாமல் அரசாங்கத் திட்டங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சினையை எழுப்பிய ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இன்னும் கண்ணியமாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் அவர் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

இத்தகைய செயல்கள் பொருத்தமற்றவை.

மேலும் மடானி அரசாங்கத்தால் காட்டப்படும் மனித மதிப்புகளான வெளிப்படைத்தன்மை, பணிவு மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முரணானவை.

பத்திரிகையாளர் தனது வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார்.

கேள்விகள் கேட்பது ஒரு பத்திரிகையாளரின் அத்தியாவசியப் பொறுப்பு. அக்கேள்விகளுக்கு பணிவாக பதிலளிப்பது ஒரு அமைச்சரின் கடமை.

கேள்விகள் ஆத்திரமூட்டும் அல்லது விரும்பத்தகாததாக இருந்தாலும் கூட, ஒரு தலைவர் கேள்விகளை எதிர்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்.

அது தலைமைத்துவத்தில் முதிர்ச்சி, ஞானத்தின் அடையாளமாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles