மீபா பியோண்ட் தேசிய கால்பந்து போட்டியில் பினாங்கில் இருந்து மூன்று குழுக்கள் பங்கேற்பு

பிறை, நவ 21-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை சிரம்பான் செண்டாயன் ஐஆர்சி அரங்கில் 12 வயதுக்கு உட்பட்ட ஃமீபா பியோண்ட் தேசிய கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பினாங்கு மாநிலத்தில் இருந்து இரண்டு ஆண்கள் குழு மற்றும் ஒரு பெண்கள் குழு கலந்து கொள்கிறது என்று மீபா உதவித் தலைவர் – பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

அதேசமயம் கோலாலம்பூரில் நடைபெறும் 14 வயதுக்கு உட்பட்ட கே.எல்.ஜூனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் பினாங்கு இந்தியப் பெண்கள் குழு கலந்து கொள்கிறது.

மீபா பியோண்ட் கால்பந்து போட்டியிலும் கே எல்.ஜூனியர் கிண்ண போட்டியிலும் பினாங்கு குழு அதிரடியை படைக்கும் என்று அவர் சொன்னார்.

இன்று காலையில் பிறை முனீஸ்வரர் கோவிலில் இருந்து பினாங்கு குழுக்கள் சிரம்பான் மற்றும் கோலாலம்பூர் நோக்கி சென்றபோது பிறை ஐயா கோவில் தலைவர் சேகரன் அவர்கள் காலை சிற்றுண்டி வழங்கி வழி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles