மகளை மீட்க போராடும் இந்திரா காந்திக்கு ஆதரவாக குலசேகரன் – டத்தோ அம்பிகா உட்பட பலரும் களம் இறங்கினர்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 22-
மகள் பிரசான்னாவை மீட்க போராடி வரும் இந்திரா காந்திக்கு ஆதரவாக இன்று தலைநகரில் நடைபெற்ற பேரணியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

இந்திரா காந்தி வழக்கில் முதல் முதலில் வாதாடிய வழக்கறிஞரும் சட்டத் துறை துணை அமைச்சருமான எம் குலசேகரன், டத்தோ அம்பிகா சீனிவாசன், பெர்சே தலைவர் மரினா, பிரபல வழக்கறிஞர் டி பி.விஜேந்திரன், வழக்கறிஞர் நாகராஜன் உட்பட பொது மக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

கோலாலம்பூர் சோகோ பேராங்காடியில் இருந்து ஊர்வலமாக புக்கிட் அமான் நோக்கி அனைவருக்கும் நடந்து வந்தனர்.

மகள் பிரசான்னாவை பிரிந்து 16 ஆண்டுகளாக தாயார் இந்திரா காந்தி பரிதவித்து வருகிறார்.

மதமாற்றம் செய்யப்பட்ட பிரசான்னா இப்போது தந்தையாரிடம் உள்ளார்.

அவரிடம் இருந்து மகளை மீட்க இந்திரா காந்தி 16 ஆண்டுகளாக போராடி வருவது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

புக்கிட் அமான் போலீசார் பிராசன்னாவை கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளை மீட்க போராடி வரும் இந்திரா காந்திக்கு ஆதரவாக மஇகா களமிறங்கும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மகள் பிரசன்னாவை மீட்க வேண்டும் என்பதற்காக இந்திரா காந்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

குறிப்பாக மகளுடன் தலைமறைவாக இருக்கும் முஹம்மத் ரிட்சுவானை போலிசார் கண்டுப் பிடிக்க வேண்டும் என அவர் நீதி போராட்டமும் நடத்தி வருகிறார்.

ஆனால் இன்று வரை அவர்களை போலிசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இதன் அடிப்படையாக கொண்டு வரும் நவம்பர் 22ஆம் தேதி இந்திரா காந்தி தலைநகரில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளார்.

சோகோ பேரங்காடியில் இருந்து புக்கிட் அமானை நோக்கி அவர் நடந்து செல்லவுள்ளார்.

இந்திரா காந்திக்கு மஇகா முழு ஆதரவை வழங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles