சிலைகளும் ஆலயமும் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டதா? வீண் வதந்திகளை நம்பாதீர்கள்

கோத்த கெமுனிங் டிச 3 ;-சிலைகளும் ஆலயமும்  உடைத்து அப்புறப் படுத்தப் பட்டதா? வதந்திகளை வீண் நம்பாதீர்கள் புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்துச் சிலைகளும் இடம் மாற்றப்பட்டு விட்டதாக ஆலய நிர்வாகம் அறிவித்தது.

இன்று டிக் டோக்கில் வைரல் ஆகி வரும் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்துத் தெய்வ வழிபாட்டு சிலைகளும் முறையாக ஆகம விதிக்கு உட்பட்டு  இடம் மாற்றம் செய்து விட்டதாகவும் உடைந்த நிலையில் இருக்கும் அச்சிலையானது கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு சிலை என்பதுடன் அச்சிலை அகற்ற முடியாத சூழ்நிலையில் அங்கே இறுக்கமான கம்பிகளைக் கொண்டு பிணைக்கப்பட்டு இருந்தால் அச்சிலையை மட்டும் ஆலய நிர்வாகம் அகற்றாமல் விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆலய நிர்வாகமும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சாம்புநாதனின் அறிவுறுத்தலின் பேரில் புதிய இடத்திற்கு மாறிச் செல்வதற்கான உத்தரவாதத்தைத் தந்ததுடன்,இடம் மாறுவதற்கு முன்பு அனைத்துச் சிலைகளையும் முறையாக இந்து ஆகம விதிப்படி  அகற்ற வேண்டும் என்று சட்டமன்ற மன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பெயரிலேயே அனைத்துச் சிலைகளையும் ஆலய நிர்வாகம் அகற்றியதாகவும் அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வழங்கினர்.

அதேவேளை பொது மக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களையோ,செய்திகளையோ அல்லது தனி நபர்களின் குற்றச்சாட்டுகளையோ முறையாக விசாரித்தபிறகு பகிரவோ அல்லது நம்பும் படியும்  ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles