



மலாக்கா, ஜன 10-
மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் என்ற உற்சாகத்துடன் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் அனைவரும் பள்ளியில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
இதில் வசதி குறைந்த அதாவது பி- 40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல இயக்கங்கள் உதவி புரிந்து வருகிறது.
அந்த வகையில் நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia எனப்படும்
புளூஸ் பிரதர்ஸ் வெல்ஃபேர் அண்ட் அசோசியேஷன், மலாக்காவில் பள்ளி தொடக்க ஆண்டு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது .
மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மற்றும் அத்தியாவசிய கற்றல் கருவிகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
குறிப்பாக வசதி குறைந்த மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த உதவிகள் குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Dato’ Mejar Segar (Rtd) வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவிகளை புளூஸ் பிரதர்ஸ் செய்தது.
மேலும் மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் Samad-President Blues Brothers Welfare And Association Malaysia
G.Chandrasegaran-Chief Advisor Blues Brothers Welfare And Association Malaysia
Leo-President Blues Brothers Welfare And Association Sri Lanka
Mike- Advisor Blues Brothers Welfare And Association Malaysia
Ybhg.Datuk Dr.M.Shankar – Youth Leader Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

