பப்ளிக் கோல்ட் டிரிபிள் டையமண்ட் சாதனை – 14 முன்னணி தொழில்முனைவோர்களுக்கு உயரிய அங்கீகாரம்!

பெட்டாலிங் ஜெயா, ஜன 10-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமாக விளங்கும் பப்ளிக் கோல்ட் (Public Gold) நிறுவனம், 2024/25 ஆண்டுக்கான “Triple Diamond Recognition Ceremony” நிகழ்வை கோலாகலமாக நடத்தியது.

இந்த பிரமாண்ட விழா One World Hotel, Bandar Utama-வில் பிரமாண்டமாக நடைபெற்றது.

உலகம் முழுவதும் இருந்து Public Gold Business Owners (PGBO) பங்கேற்ற இந்த விழாவில், சிறப்பான சாதனை படைத்த 14 முன்னணி தொழில்முனைவோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை Public Gold நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் குழும செயல் தலைவர் டத்தோ ஸ்ரீ லூயிஸ் எங்  தொடக்கி வைத்தார்.

மேலும், டத்தீன் ஸ்ரீ இவோன் லிம் (Aurora Italia International Berhad நிர்வாக இயக்குநர்) மற்றும் PGMall தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜெர்ரி எங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில்  தொடங்கப்பட்ட Public Gold, இன்று மலேசியாவில் 30 கிளைகள், இந்தோனேசியாவில் 7 கிளைகள் மற்றும் சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற சர்வதேச நகரங்களில் அலுவலகங்களுடன் உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது, சுமார் 23 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக Fintech அடிப்படையிலான தங்க ATM இயந்திரத்தை அறிமுகப்படுத்தி வரலாறு படைத்த Public Gold, 2025 ஆம் ஆண்டு துபாய் Precious Metals Conference-இல் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.


இதுவரை RM 23.5 பில்லியன் மொத்த விற்பனையையும், 88 டன் தங்க விற்பனையையும், 52 டன் தங்க மீள்வாங்கலையும் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு விழாவின் உச்சமாக, “Million Star Triple Diamond” என்ற உயரிய பட்டம் முகமட் சுல்கிப்லி பின் ஷாஃபீ மற்றும் அவரது துணைவியார் நஜ்டா பிந்தி முகமட் ஹுசைன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அவர்கள் Public Gold வரலாற்றில் முதல் Triple Diamond Leadership Pin பெறுபவர்களாக சாதனை படைத்தனர். இவர்களுக்கு மொத்தமாக RM 2.09 மில்லியன் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும்,
5 Star Emerald – டாக்டர் முகமட் சயஃபிக் ரோஸ்லான் & டாக்டர் சுஹைலா ஜஹருடீன்
5 Star Ruby, 4 Star Ruby, 3 Star Jade, 2 Star Jade, 3 Star Pearl, 2 Star Pearl ஆகிய பிரிவுகளில் பல்வேறு PGBOக்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மொத்தமாக சுமார் RM 3 மில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

“ஒழுக்கம், நம்பிக்கை மற்றும் உறுதியான செயல்முறைதான் வெற்றியின் அடித்தளம். Public Gold-இல், கனவுகளை நிஜமாக மாற்றும் சக்தி ஒவ்வொருவரிடமும் உள்ளது”
என்று நிகழ்வில்  டத்தோ ஸ்ரீ லூயிஸ் எங் தெரிவித்தார்.

எதிர்காலத்தை நோக்கி, 2030க்குள் உலகளவில் 1 கோடி வாடிக்கையாளர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கை Public Gold நிறுவனம் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles