
மா.பவளம்
கோலாலம்பூர் ஜன 11-
மலேசிய திருநாட்டில் இந்திய சமுதாயத்தின் மத்தியில் மாபெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 2026 கல்வி ஆண்டு இன்று மிகவும் கோலாகலமாக தொடங்கியது.
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி கந்தையா மண்டபத்தில் இன்று காலையில் 2026 கல்வி ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
கந்தவேள்வி முழக்கத்துடன் தொடங்கிய ஸ்ரீ முருகன் கல்வி நிலைய விழாவில் ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
44 ஆண்டுகளுக்கு முன் கல்வி தந்தை டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா அவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை ஆரம்பித்தார்.
இந்த 44 ஆண்டுகளில் 60,000 க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு உள்ளது.
அந்த வகையில் அமரர் டான்ஸ்ரீ தம்பிராஜா அவர்களின் ஆசியோடு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர்களான தர்மா, ஸ்ரீகணேஷ் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

