கடந்த ஆண்டுகளை போல் இவ்வாண்டும் பல போட்டிகளை மீபா வெற்றிகரமாக நடத்தும் -அன்பானந்தன் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜன 10-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் கடந்த ஆண்டுகளை போல் இவ்வாண்டும் பல விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி காட்டும் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இடையிலான கால்பந்து போட்டி, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து போட்டி மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் இடையிலான கால்பந்து போட்டியும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டு நடத்தப்படும் போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் இந்தியர் அல்லாத மூன்று வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

இதனிடையே கால்பந்து கிளப் முறையாக இயங்கும் வகையில் மீபா ஏற்பாட்டில் இன்று பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

கால்பந்து கிளப்புகள் எவ்வாறு இயங்க வேண்டும், எப்படி வழிநடத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமான கால்பந்து கிளப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles