பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு ஆற்றங்கரை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது!

கோலாலம்பூர் ஜன 10-
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றாங்கரையை சுத்தப்படுத்தும் பணி இன்று காலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மண்வாரி இயந்திரம் ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றியது.

பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் குழாய்களையும் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்

தைப்பூசத்தை முன்னிட்டு பல புதிய மாற்றங்களுடன் பத்துமலை ஆற்றங்கரை பக்தர்களுக்கு தயார் நிலையில் இருக்கும் என்று
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

தைப்பூச விழா அடுத்த மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.

குறிப்பாக தை மாதம் பிறந்ததும் பக்தர்கள் தங்களிம் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்ய தொடங்குவார்கள்.

இதன் அடிப்படையில் ஆற்றங்கரை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தொடங்கி விட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை சேர்ந்த பிரபல குத்தகையாளர் விவேக் தலைமையில் இப்பணிகள் நடைபெறுகிறது.

குறிப்பாக ஆற்றங்கரையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அண்மையில் தீ விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்து பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும் தேவஸ்தானம் இவ்விடத்தை சுத்தம் செய்து பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்

இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். ஆற்றங்கரையை சுற்றி வேலி அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles