
காளிதாஸ் சுப்ரமணியம்
ஷா ஆலம், ஜன 9-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு விவகாரம் தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வேளையில் இன்று மாலையில் பரபரப்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது எந்தவொரு திட்டமும் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல்தான்
பத்துமலை மின்படிக்கட்டு விவகாரத்தில் அனைத்தும் சட்டமுறைப்படி தான் நடைப்பெற வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் & வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முறையாக தேசிய சங்கங்களின் பதிவிலாகாவின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு மன்ற குழுவில் விதிமுறை வரையறுக்கப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.
தற்காலிக குடியேற்ற உரிமத்திற்கு விண்ணப்பம் வேண்டுமென்றால் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம்.
ஆனால் மின் படிக்கட்டு அமைப்பதில் அனுமதி வழங்குவதில் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் ஆலய நிர்வாகம் முறையாக ஓர் அமைப்பு அல்லது ஓர் இயக்கத்தின் கீழ் பதிவு பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று பாப்பாராய்டு தெளிவுப் படுத்தினார்.

