
ஷா ஆலம், ஜன 9-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜாவும் தேவஸ்தானமுமீ தொடுக்கும் வழக்கை சந்திக்க தயார் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று சவால் விடுத்தார்.
நான் எந்தவொரு அவதூறு பரப்பவில்லை.
மேலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் .
எனது வழக்கறிஞர்கள் சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்வார்கள் . ஆகவே அவரும் தேவஸ்தானமும் தொடுக்கும் வழக்கை சந்திக்க தயார் என்று அவர் சொன்னார்.
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்று இதற்கு முன்னர் டான்ஸ்ரீ நடராஜா நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டத்திற்கு தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்ததால் அனுமதி கிடைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த மின் படிக்கட்டு விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தமது ஆட்சிக் குழு உறுப்பினர் அலுவலகத்தில் இரண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டான்ஸ்ரீ நடராஜா அவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையெனில் வழக்கு தொடுக்கப்படும் என்று கூறினார்.

