

KTM அகாடமியில் (MyRA)
நேற்று 5ஆவது பட்டமளிப்பு விழாவில் 315 பட்டதாரிகள் பட்டம் பெற்று மகிழ்ந்தனர்.
பேராக், பத்து காஜாவில் உள்ள KTM அகாடமி (MyRA) மலர் மண்டபத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் மனிதவளத்துறை அமைச்சர் வ.சிவகுமார் 315 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹாஜி ஹஸ்பி ஹாஜி ஹபிபுல்லா மற்றும் கேடிஎம்பி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ முகமட் ராணி ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்

