
ஐபிஎப் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. கட்சி தலைமை பொறுப்பிற்கு அனைவரும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. இருந்தப்போதிலும் கட்சிக்கென்று சட்டவிதிமுறைகள் உள்ளன. அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமாறு ஐ பி.எப் தலைமை செயலாளர் மோகன் கேட்டுக் கொண்டார்.
தேசியத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கட்டாயம் தொகுதி தலைவராக இருத்தல் அவசியம்.
அவர் 20 தொகுதிகள் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் 15 தொகுதிகள் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.
5 தேசிய உதவித்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 10 தொகுதிகளின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.
தேசிய மத்திய செயலவைக்கு போட்டியிடும் நபர்கள் கட்சி உறுப்பினராக குறைந்தது 5 ஆண்டுகள் இருத்தல் வேண்டும். கேறைந்தது 5 தொகுதிகளின் ஆதரவை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விரைவில் ஐபிஎப் கட்சியின் 30 ஆவது தேசியப் பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

