
நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களை ஏஜென்சிகள் மூலம் தருவிக்கப்படுவதை மாற்றம் செய்யப்படலாம் என்று மனிதவள் அமைச்சர் சிவக்குமார் வரதராஜு தெரிவித்தார்.
ஏஜென்சிகள் இல்லாமல் நேரடியாக அந்நியத் தொழிலாளர்களை நேரடியாக தருவிப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் நேப்பாளம் நாடுகளுடன் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
அந்த வகையில் ஏஜென்சிகள் இல்லாமல் நேரடியாக அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.
பத்து காஜாவில் கேடிஎம் அகாடமி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

