மலேசியாவில் தமிழ் வாழ்க்கிறது என்றால் அதற்கு தமிழ்ப்பள்ளிகள் தான் காரணம்! அமைச்சர் சிவக்குமார் பெருமிதம்

மலேசிய திருநாட்டில் தமிழ் வாழ்க்கிறது என்றால் அதற்கு தமிழ்ப் பள்ளிகள்தான் காரணம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் பேருமிதத்துடன் தெரிவித்தார்.

உலகில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியாவில் தமிழ் வாழ்க்கிறது. .

528 தமிழ்ப்பள்ளிக்கள் இருப்பதால் மலேசியாவில் தமிழ் வாழ்க்கிறது.

இந்த பள்ளிகளை கட்டிக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு மலேசிய தமிழர்களுக்கு இருக்கிறது என்று அவர் சொன்னார்.

நானும் நீங்களும் இன்று சராளமாக தமிழ் உரையாடுவதற்கு. தமிழ்தான் காரணம். அதற்கு அடித்தளமாக விளங்கிக் கொண்டிருப்பது தமிழ்ப் பள்ளிகள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேஎல்சிசி அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற அனைத்துலக நகரத்தார் மாநாட்டினை மனித வள அமைச்சர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது இதனைத் தெரிவித்தார்.

மலேசிய திருநாட்டில் கல்வி, மொழி,இனத்திற்கு நகரத்தார் ஆற்றியிருக்கும் சேவைகள் அளப்பரியது என்று சிவகுமார் சுட்டி காட்டினார்.

தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு மலேசிய நகரத்தார் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

டத்தோ ஆர் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ் நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles