


கோலாலம்பூர் ஜூன் 16-
மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலையங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்வு காண வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா. இராஜசேகரன் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் அவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு கொண்டு இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுக் கொடுத்தார்.
குறிப்பாக முடி திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் கடைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைத்தார்கள். இருப்பினும் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை .
இன்னும் 500 அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாரை சந்தித்து இது பற்றி பேசினோம்.
எங்களுக்கு 500 தொழிலாளர்கள் கிடைக்க பிரதமரிடம் பேசுவதாக சிவகுமார் கூறி இருக்கிறார்.500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தலைமையுரை யாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரெஸ்மா தலைவர் டத்தோ முகமட் மோசின் இந்த ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

