ஆட்சிக்குழு உறுப்பினர் யோகேஸ்வரன் மறைவுக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம்!

கோலாலம்பூர் ஜூன் 16-
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் அன்பு சகோதரர் யோகேஸ்வரனின் திடீர் மறைவு பெரும் வேதனையை அளிக்கிறது என்று சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல் பணிக்கு திரும்பிய அவர் பின்னர் மக்கள் ஓசை பணிமனையில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசையில் நீண்ட காலம் பணியாற்றியவர். ஒரு ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி பத்து கேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்பு செய்யப்பட்ட 15 மூத்த பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர்.

பழகுவதற்கு இனிமையானவர். அனைவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும் விளங்கினார்.

அவரை இழந்து துயருறும் மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்பத்தினர்க்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முத்தமிழ் மன்னன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles