
சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டில் 1 லட்சத்து 41,144 இல்லத்தரசிகள் நன்மை அடைகிறார்கள் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
இந்த எண்ணிக்கையில், 135,281 பேர் இல்லத்தரசிகள் இ-காசியில் பதிவு செய்து, ஊழியர்களின் சேமிப்பு நிதியின் (KWSP) ஐ-சூரி திட்டத்தில் பங்களிக்கின்றனர்.
மனித வள அமைச்சு , பல்வேறு தரப்பினருடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சொக்சோ சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகள் பங்கேற்க முடிந்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வலுவான ஆதரவுடனும், இன்று சொக்சோ சமூகநல பாதுகாப்பு திட்டம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காண்கிறது.
மனித வள அமைச்சும் SOCSOவும் இந்த ஆண்டுக்குள் 500,000 இல்லத்தரசிகளின் இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சொக்சோ சமூகநல பாதுகாப்பு திட்டம் மற்றும் MyFutureJobs 2023 தொழில் திருவிழாவ பேசும் போது மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்திய பிராந்தியத்தில் மலேசியா முதல் நாடு மற்றும் உலகில் நான்காவது நாடாகும் என்றார்.

